/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_17.jpg)
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள குறிஞ்சிபை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(60). இவர், அதே ஊரில் உள்ள ராமர் கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது, அவர் நேற்று காலை அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக டிராக்டர் கொண்டு உழவு பணியை செய்துகொண்டிருந்தார்.
அப்போது அவரது உறவினரும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவருமான தர்மராஜ்(75) என்பவர், தன் நிலத்தை ஒட்டி ரங்கநாதன் உழவு செய்வதாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது அவர்களுக்கிடையே கை கலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரங்கநாதன், அவரது மனைவிகள் வசந்தா(50), பிருந்தா(48) ஆகிய மூவரும் சேர்ந்து தர்மராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து தர்மராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவல் அறிந்த ரங்கநாதன் அவரது மனைவிகள் ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். தர்மராஜன் இறந்த தகவல் அவரது மகன் சக்கரவர்த்திக்கு தெரியவந்ததை அடுத்து, உடனடியாக தந்தை கொலை செய்யப்பட்டது குறிச்சி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தர்மராஜன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ரங்கநாதன் அவரது மனைவிகள் வசந்தா, பிருந்தா ஆகிய மூவர் மீதும் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)