கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சரவணன் (45). இவர், விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது மாடுகளை அருகில் உள்ள வயல்வெளி தோட்டத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்யவே அருகிலிருந்த மாமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது அருகில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்துள்ளது. இதுமாமரத்தின் அடியில் நின்றிருந்த சரவணனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் அங்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடி தாக்கி விவசாயி பலி!
Advertisment