Skip to main content

“விவசாயி என்றால் வார்த்தை இல்லை செயல்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

 

"Farmer means action not words" Minister Senthil Balaji

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தடாக்கோவிலில் விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. 

 

இவ்விழாவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பினை வழங்குவோம். நானும் ஒரு விவசாயி என்று வெறும் வார்த்தையில் சொன்னால் மட்டும் போதாது. 

 

உண்மையான விவசாயி என்றால் பதிவு செய்திருந்த 4.50 லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கி இருக்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியிலும் மின்சார வாரியத்தின் சூழல் மிக மோசமாக இருந்தபோதும் கூட தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் உண்மையான விவசாயி. விவசாயி என்பது வெறும் வார்த்தை இல்லை. செயலில் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.


 

இதை படிக்காம போயிடாதீங்க !