/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_204.jpg)
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவரது மனைவி மாலதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சதீஷும், அவரது மனைவியும் அதே பகுதியில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தனர். சமீபகாலமாக தனக்கு கடன் அதிகரித்துவிட்டதாக சதீஷ் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலதி தனது தங்கையைப் பார்த்து விட்டு வருவதற்காக வள்ளியம்பாளையம் சென்றிருந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலையில் வீட்டுக்கு வந்த சதீஷின் மூத்த பெண் குழந்தை, வீட்டினுள் தனது தந்தை சதீஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது தாய் மாலதிக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் விரைந்து வந்து உறவினர்களின் உதவியுடன் சதீசின் உடலை மீட்டனர். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)