/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_268.jpg)
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை அடுத்துள்ள புங்கம்பள்ளி, கோயில் தோட்டம் பகுதியைச்சேர்ந்தவர் கலைவாணன்(32). விவசாயி, இவர் தனது தாத்தா ரங்கப்பருடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாகக் கலைவாணன் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கிடைக்காததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத்தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கலைவாணன் குடித்துவிட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவருக்குஉடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, உயர் சிகிச்சைக்காக நேற்று சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)