/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_224.jpg)
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள குளத்துப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (55). இவரது மனைவி செல்வி (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விவசாயம் செய்து வரும் இவர்கள் தேங்காய் வியாபாரமும் செய்து வருகின்றனர்.
சுப்பிரமணிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதனால் போதையில் அவ்வப்போது, பூச்சி மருந்து குடித்து செத்து விடுவேன் என குடும்பத்தினரை மிரட்டி வருவாராம். இந்த நிலையில் கடந்த 24ம் தேதி மாலை வீட்டுக்கு வந்தபோது தள்ளாடியபடியும், மயங்கிய நிலையிலும் சுப்பிரமணியம் வந்துள்ளார்.
அது குறித்து, மனைவி செல்வி அவரிடம் கேட்டபோது, செடிகளுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)