Skip to main content

விவசாயி கணவனை வெறுத்து உயிரைவிட்ட ஸ்டெல்லா மேரி!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

2005-ல் முதலமைச்சராக இருந்தபோது உழவர் மாநாட்டைத் தொடங்கிவைத்து ஜெயலலிதா இப்படி பேசினார். “என்னை பொறுத்தவரையில் நான் ஒரு விவசாயி. எந்தப் படிவத்திலும் உங்களது தொழில் என்ன என்று கேட்கப்படும் இடத்தில் விவசாயம் என்றே நான் குறிப்பிடுவேன். இதைச் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழில்தான் விவசாயம். இதைச் செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள்.  ‘கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும்’ என்றான் வங்கக் கவிஞன் தாகூர். அதுபோல ஆயிரமாயிரம் பயிர்ச் செடிகளைப் படைக்கும் விவசாயிகள் உண்மையில் தெய்வங்கள்.” என்றார். 

‘ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்! உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்!” என்று விவசாயி திரைப்படத்தில் பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட தன்னை ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறார். சமீபத்திய சினிமாக்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஓஹோ என்று போற்றுகின்றன. 
 

 The farmer  her husband  Stella Marie take and decide wrong decision rajapalayam



‘மாறுவோம்.. மாற்றுவோம்!’ என்ற அமைப்பைத் தொடங்கி,  ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்துக்குச் செயல்வடிவம் தந்திருக்கும் நடிகர் ஆரி “உலகளவில் இந்தியா ஒரு விவசாய நாடு. உழவும் மருத்துவமும்தான் நமது ஆதித்தொழில். அனைவரும் விவசாயிகளாக மாறவேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விவசாயம் அறியாதோரையும் விவசாயியாக மாற்றும் முயற்சி இது.” என்கிறார். 

அட, இவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படும் திருவள்ளுவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம்! ‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார். அதற்கு விளக்கம் -  உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்னால்தான் நிற்கிறது. அதனால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்பதாகும். 

 The farmer  her husband  Stella Marie take and decide wrong decision rajapalayam



உழவுத்தொழிலே முதன்மையானது என்பது நூற்றுக்கு நூறு  உண்மையென்றாலும், விவசாயத்தை நம்மில் பலரும் பார்க்கும் விதம் வேறாகத்தான் இருக்கிறது என்பதே சுடுகின்ற நிஜம்! அத்தகையோரில் ஒருவராகத்தான் இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. அதனால் ஏற்பட்ட விபரீதம் என்ன தெரியுமா?

 The farmer  her husband  Stella Marie take and decide wrong decision rajapalayam


நர்சாகப் பணிபுரிந்த ஸ்டெல்லா மேரி, ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் மாடசாமியை 4 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பொறியியல் படித்திருந்தாலும், சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் மாடசாமி. மகன், மகள் என்று குடும்ப வாழ்க்கை நகர்ந்தபோதிலும்,‘படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறாரே!’என்று கணவர் மீது கோபத்தை வெளிப்படுத்துபவராகவே இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. ஆடம்பரமாக வாழும் மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, ‘அரசு வேலைக்குச் செல்லலாமே..’ என்று கணவரிடம் பிரச்சனை செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ‘சரி.. வெளியூர் வேலைக்காவது செல்லுங்கள். இந்த விவசாயத் தொழில் வேண்டவே வேண்டாம்.’என்று முரண்டு பிடித்திருக்கிறார். இது அவருக்கு தீராத பிரச்சனையாகிவிட, விரக்தியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது, ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

உணவளித்து உலக மக்களை வாழ வைக்கிறது விவசாயம்! அதன் உன்னதத்தை உணராதவராகவே இருந்ததால், ஸ்டெல்லா மேரியின் உயிரே போய்விட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.