புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே இரவில் பெய்த கனமழையால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளன. காட்டாறுகளிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மழைத் தண்ணீர் செல்லும் போது அதிக அளவில் மீன்கள் வருவதால் ஆங்காங்கே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்பிடித்து வருகின்றனர்.
அதே போல திருவரங்குளம் அருகே உள்ள பூவரச்சக்குடி தாத்தாச்சிக்குளத்தில் ஏராளமானவர்கள் மீன் பிடித்துள்ளனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி நாகலிங்கம் (50) வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நாகலிங்கம் தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நாகலிங்கம் உடலை மீட்டுள்ளனர்.