Advertisment

மனைவி நான்கு மாத கர்ப்பம்... புத்தாண்டு நாளில் கணவருக்கு நேர்ந்த சோகம்

Farmer drowns in well, body found 24 hours later

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர்(35). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் பழுதானால்கிணற்றில் இறங்கி, தண்ணீரில் மூழ்கி மோட்டாரை மேலே கொண்டுவருவது வழக்கம். அதே போல் நேற்று பழுதான மோட்டாரை வெளியில் எடுப்பதற்காகசுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 75 அடி அளவிற்கு தண்ணீர் இருந்த நிலையில், கிணற்றில் குதித்துள்ளார்.

Advertisment

2 முறை நீரில் மூழ்கி வெளியே வந்தவர், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கும்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறி கிணற்றில் மூழ்கியதாகத் தெரிகிறது. இது பற்றி அருகிலிருந்தவர்கள் உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 10 தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 4 மணி முதல் கிணற்றில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தேடியும் சந்திரசேகரை மீட்க முடியவில்லை.

Advertisment

Farmer drowns in well, body found 24 hours later

கிணற்றில் இருந்த நீர்மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 24 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பின் விவசாயி சந்திரசேகர் சடலமாக மீட்கப்பட்டார். கிணற்றில் மூழ்கி பலியான சந்திரசேகருக்கு மேகலா(28) என்ற மனைவியும், தர்ஷினி என்ற 4 வயது மகளும் உள்ளனர். மேகலா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். வருடத்தின் முதல் நாளே விவசாயி சந்திரசேகர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Farmer trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe