Skip to main content

மோடிக்கு கோவில் கட்டிய துறையூர் விவசாயி...!  எடப்பாடி படத்திற்கு பொட்டு வைத்தும் வழிபாடு!

தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு கோவில் கட்டுவது என்பது வாடிக்கையான ஒன்று ஆனால் திருச்சியில் இதற்கு முன்பு நடிகை குஷ்புவுக்கு அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் மாத்தூர் பகுதியில் கோவில் கட்டினார். பிறகு அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் குஷ்பு கோவில் இடிக்கப்பட்டது. குஷ்புக்கு கோவில் கட்டி சர்ச்சையை ஏற்படுத்திய அதே திருச்சி மாவட்டத்தில் தற்போது பிஜேபியை சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவிலும், அந்த கோவில் உள்ளே இந்த தலைவர்களுக்கு நடுவே அமிர்ஷாவுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டோவை வைத்து பொட்டு வைத்திருப்பது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது எரகுடி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் சங்கர் 50 வயதாகிறது. பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
 

farmer construct temple to modi

 

விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணுடன் இருந்தவர் பிறகு அவருடை நடவடிக்கையில் உடன்பாடு இல்லாமல் வெளியே வந்து தனியே விவசாய சங்கம் நடத்தி வருகிறார். கூட அதுவும் ஏரகுடியில் சொந்தமாக உள்ள விவசாய தோட்டத்தியே இந்த கோயிலை கட்ட ஆசைப்பட்டார். பார்ப்பதற்கு சின்ன கோயிலாகதான் இருக்கிறது. ஆனால் சொந்த செலவில் இதை கட்டி, அதற்குள் மோடியின் ஒரு சிலையையும் வைத்துள்ளார்.

மேலும் கோயிலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, மகாத்மாகாந்தி, காமராஜரின் உருவப்படங்களுக்கு நடுவே உயிரோடு உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகிய படங்களுக்கு பொட்டு வைக்கப்பட்டுள்ளன. தினமும் மோடி சிலைக்கு பாலாபிஷேகம், தீபாராதணை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.

 

farmer construct temple to modi

 

மோடி கோவில் குறித்து சங்கர் பேசும் போது… வறுமையின் காரணமாக நான் பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் எழுதப்படிக்கக் கூட தெரியாது. நான் தான் படிக்கல, பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளேன். மகள் 12 -ம் வகுப்பில் 1105 மதிப்பெண் பெற்றார். ஆனால், கட் ஆப் இல்லாததால் டாக்டராக ஆக முடியவில்லை. நீட் தேர்வு இல்லாதிருந்தால் என் மகள், டாக்டராகி இருப்பார். அதனால், சின்ன பையனை நீட் கோச்சிங்கில் சேர்த்துள்ளேன். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது எனக்கு பிஜேபி உறுப்பினர் ஆனா எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

8 மாசத்துக்கு முன்னாடி தான் கோயில் கட்ட ஆரம்பிச்சேன். கட்சியின் மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்ராதா கிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது என் ஒரே லட்சியம்.

மோடி திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டும் என பழனி கோயிலுக்கு வேண்டி கொண்டிருக்கிறேன். இதுக்காகத்தான் ஒரு வருஷமா முடி வளர்த்துட்டு வர்றேன்.. இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை நல்லபடியா முடிச்சிட்டுதான், பழனி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, தங்கத்தேர் இழுக்க உள்ளேன்" என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்