நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவசாய அமைப்புகள்,அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ்,தி.மு.க உள்ளிட்ட ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது 3 மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.