ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

03:06 PM Jun 12, 2019 | kirubahar@nakk…

விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கே.நாகராஜன்,கே.உத்தரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்ட செயலாளர் பி.பழனி,விவசாய சங்கத்தின் சங்கராபுரம் வட்ட செயலாளர் எஸ்.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் பி.ராமாக்கண்ணு, ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் எம்.மணிகண்டன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பாஸ்கர், வட்டச் செயலாளர் ஆர்.வெங்கடேசன், துணைத் தலைவர் இ.ராம்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், 2018-19 ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்திட வேண்டும், ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி பராமரிப்பு வேலையை உரிய காலத்தில் செய்திட வேண்டும், குடிநீரின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநில எல்லையில் புதிய அணை கட்டுவது தடை செய்ய வேண்டும், சங்கராபுரம் வட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பின்னர் இது தொடர்பாக சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் அவரிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT