Advertisment

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்தவர் கைது! 

Farmer arrested under pocso act

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மேலரசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சுமணி என்பவரின் மகன் முத்து(50). இவர், இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை, முத்து மீது அதேபகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர், தங்களது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

Advertisment

அந்தப் புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி, விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில், அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி, தன் வீட்டில் தனியாக இருந்த பொழுது மாணவியை இவர் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

POCSO trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe