Advertisment

ஃபரிதா, கே.ஹெச் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 

Farida, K.H. Group of places owned by the Income Tax Department action!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தோல் பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வரும் ஃபரிதா மற்றும் கே.எச் குழுமத்திற்கு தொடர்புடைய 57- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.

Advertisment

வேலூரை மையமாகக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி ஃபரிதா குழுமம், ராணிப்பேட்டையை மையமாக கொண்ட கே.ஹெச் குழுமத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இரு நிறுவனங்களுக்கும் தொடர்புடைய, அலுவலகங்கள் மற்றும் வீடுகள், அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களின் வீடுகள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஃபரிதா நிறுவனத்திற்கு சொந்தமான வேலூர், ஆம்பூர், பேரணாம்பட்டு, சென்னையில் ராமாபுரம், நுங்கம்பாக்கம், பெரியமேடு என 10- க்கும் மேற்பட்ட இடங்களிலும், கே.ஹெச். நிறுவனத்திற்கு சொந்தமான ராணிப்பேட்டையில் உள்ள இரண்டு தோல் தொழிற்சாலைகள், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லிக்கு அருகே உள்ள சென்னீர்க்குப்பம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை மற்றும் புதுச்சேரியிலும் வருமான வரித்துறையினர் இன்று (23/08/2022) காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe