Fans stormed the shooting spot; Welcome to flower shower Vijay

Advertisment

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது நடிகர் விஜய் வந்திருப்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு சூழ்ந்தனர். மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர். இதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த தகவல் நடிகர் விஜய்க்கு செல்ல வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு கை காட்டினார். அவர் மீது அவரது ரசிகர்கள் பூக்களை தூவி தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பே கட்சி பெயரை அறிவித்த நாளிலேயே ரசிகர்களை நோக்கி கையசைத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ரசிகர்கள் மத்தியில் விஜய் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.