Advertisment

ஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் முதல் சீசனில் ஓவியா,ஆரவ் போட்டியாளர்களின் காதல் விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த காதல் விவகாரத்தால் நடிகை ஓவியா போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் சீசனில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்களிடையே பிரபலமான ஜூலியும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார்.

Advertisment

julie

Advertisment

மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு எவ்வளவு தூரம் பாசிட்டிவ் ஆதரவு இருந்ததோ, அந்த அளவுக்கு எதிர்ப்பு ஜூலிக்கு மக்களிடையே பிக் பாஸ் சீசன் ஒன்றில் இருந்தது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜூலி சென்றுள்ளார். அப்போது ஜூலி பேச ஆரம்பிக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் ஓவியா வாழ்க, ஓவியா வாழ்க என்று கோஷம் போட்டுள்ளனர். அதற்கு நீங்க என்ன கத்தினாலும் எதுவும் நடக்கப் போறதில்லை என்று ஜூலி கூறினார். மேலும் நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்று டென்ஷனுடன் கண்கலங்கிய படி, நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

bigboss julie oviya Program tv show twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe