நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

ஒவ்வொரு ஆண்டும் ரஜினி ரசிகர்கள் அவர் பிறந்தநாளின் பொழுது சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்போது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து கையசைத்து தனது நன்றியை தெரிவிப்பார். கடந்த ஆண்டு அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் பிறந்தநாள் அன்று ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.

Advertisment

தற்போது ரஜினிகாந்த் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள அவரது பெயர் பலகையின் முன்பு நின்று ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அதேபோல் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியில் இருக்கும் ரஜினிகாந்த்தின் புகைப்படத்திற்கு இனிப்புகளை ஊட்டுவது போல் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.