Advertisment

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

Fans pay special homage to DMDK leader Vijayakanth

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கரோனா தொற்று காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில்வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். அந்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்தநிலையில்புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அவரது ரசிகர்கள் மற்று கட்சிப் பிரமுகர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ஆலயத்தில் தலைவர் விஜயகாந்த் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

Advertisment

இது குறித்து அவர்கள் கூறும் போது, எந்த ஒரு செயலும் வெற்றியடைய வேண்டி பிரமாண்ட சிவன் சிலையை சுற்றி எதிரே உள்ள தலைமைப் புலவர் நக்கீரரிடம் முறையிட்டு ஆலயத்திற்குள் ஒப்பிலாமணி அம்பிகையோடு இருக்கும் மெய்நன்ற நாதர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் எல்லாம் வெற்றியடையும். அதனால் தான் தே.மு.தி.க தலைர் முழு உடல் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தோம் என்றனர்.

corona virus Dmdk vijayakanth Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe