பாட்ஷா... பாபா... ரோபோ... ரஜினிகாந்த் வீட்டின் முன் ரஜினியின் வெர்ஷன்கள்..! (படங்கள்)

நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் முன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என 100- க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்களில் பலர் பாட்ஷா, பாபா, சிட்டி ரோபோ, அண்ணாமலை, சிவாஜி என ரஜினி நடித்த பல்வேறு கேரக்டர்களில் வேடமிட்டு ரஜினியைப் போலவே நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

rajini rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe