Advertisment

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்!

Fans celebrate by cutting the cake in front of Rajini's house!

Advertisment

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவரது ரசிகர்களும் பல்வேறு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Fans celebrate by cutting the cake in front of Rajini's house!

Advertisment

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு சில ரசிகர்கள் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். அதேபோல் திருச்சி கல்லூரி அரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர் நான்கு மொழிகளில் ரஜினிகாந்த்தின் குரலில் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

birthday Celebration rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe