
நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு தொழிநுட்பங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதனையும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டு வாசலில் நள்ளிரவு 12 மணிக்கு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கரூரில் பாபா திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு 13 கிலோ கேக் வெட்டி, பட்டாசு வெடித்து,இனிப்புகளை வழங்கி ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதேபோல் பல்வேறு இடங்களிலும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
Follow Us