ஐபிஎல்லில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும்கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறன்சினிமா நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
ஐபிஎல் ஏலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து தனித்துவமாகச் செயல்படக்கூடியவர் காவ்யா மாறன். இந்நிலையில்போலந்தில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ப்ரிமியர் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது.ஈஸ்டர்ன் கேப் அணிபார்ல் ராயல்ஸ் அணியுடன்மோதியது. அப்போது மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், தனது கையில் ‘காவ்யா மாறன் என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என எழுதப்பட்டிருந்த பதாகையுடன் அமர்ந்திருந்தார்.தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.