Advertisment

சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை... அதிர்ச்சியில் சின்னத்திரை!

பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். சீரியல்களில் நடித்துவரும் சின்னத்திரை நடிகையான ரேகாவின் கணவர் தீடீர் என்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நடிகை ரேகா. டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். நடிகை ரேகாவும், கோபிநாத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனையடுத்து கோபிநாத் வேலை பார்க்கும் தனியார் விளம்பர நிறுவனத்தில் இருக்கும் பெண்ணிடம் தவறான தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisment

rekha

மேலும் கோபிநாத் கடன் பிரச்சனையிலும் சிக்கி இருந்தார்.மனைவி ரேகாவுடன் ஏற்பட்ட தகராறினால் மன உளைச்சலுக்கு ஆளாகி அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் என்பதால் அன்றைய தினம் ஆபீஸ் லீவு விடப்பட்டிருந்தது. லீவு முடிந்து நேற்று காலை ஆபிஸ் திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது ஆபீஸ் கதவு மூடப்படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, கோபிநாத் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

incident

Advertisment

பின்பு ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. மேலும் இந்த தற்கொலைக்கு பின் வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

complaint incident family problem husband serial actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe