Advertisment

மது பழக்கத்தால் என் வாழ்க்கையே மாறியது...பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன், பாபா ஆகிய படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 2012 ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தற்போது புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நைனிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை மனிஷா கொய்ராலா பேசும் போது, எனது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை புத்தகமாக வெளியிட்டுயிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisment

actress

அதோடு, இது மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் தான் வெளியிட்டேன். யாரவது என்னை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னால் நான் அதைப்பற்றி எல்லாம் கவலைபடமாட்டேன். என்னிடம் இருக்கும் நோயை மறந்து என் நடிப்பு திறமையை மக்கள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட போது நான் என் மரணத்தை எதிர்கொண்டேன். என்னுடைய இளமை காலத்தின் ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால் தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை பற்றி புத்தகத்தில் வெளியிட்டு இருக்கிறேன். இப்போது புதிதாக பிறந்த உணர்வு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Advertisment

issues health cancer tamil cinema Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe