Advertisment

பிரபல தமிழ் நடிகை பாபிலோனாவின் தம்பி கைது... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, சென்னை சாலிகிராமம் 6வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(35). பிரபல நடிகை பாபிலோனாவின் சகோதரர். நேற்று இரவு விருகம்பாக்கம் போலீஸ் உதவி ஆய்வாளர் பழனி, காவலர் சங்கர் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலிகிராமம், தசரதபுரம் எட்டாவது தெரு வழியாக ரோந்து பணியில் இருக்கும் போது, குடிபோதையில் விக்னேஷ் என்ற இளைஞர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை மறித்து தகராறு செய்கிறார் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீஸார் சம்பவம் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்ட விக்னேஷிடம் விசாரணை நடத்தினர்.

Advertisment

actress

actress brother

அப்போது போதையில் இருந்த அவர், திடீரென காவலர் சங்கரை என்னையே பிடிக்கிறியா என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை காவலர் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே உதவி ஆய்வாளர் பழனி, காவலரை தாக்கிய விக்னேஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது, காவலர் சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். நடிகை பாபிலோனா தமிழில் தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம்வந்தவர். தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் விக்னேஷுடன் நடிகை பாபிலோனா வசித்து வருகிறார். நடிகை பாபிலோனாவின் சகோதரர் சம்பவத்தால் சிறிது நேரம் சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

Actress arrest brother complaint police tamil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe