Advertisment

பிரபல தமிழ் நடிகர் மனோ கார் விபத்தில் மரணம்!

சன் டிவியில் தொகுப்பாளராகவும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் புழல் திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ. இவர் அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளி தினத்தன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார்.

Advertisment

actor

பலத்த காயமடைந்த அவரது மனைவியை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நடிகர் மனோவின் மரணம் சினிமா துறையினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் மனோ கார் விபத்தில் மரணமடைந்ததை அறிந்த திரைக்கலைஞர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

accident actor car incident tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe