பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளைக் காணவில்லை? உண்மை நிலவரம் என்ன? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

பிரபல நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை என்று அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தமிழிசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி தொடர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி வருபவர். தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றிருப்பவர். சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். புஷ்பவனம் குப்புசாமி,அனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி மருத்துவராக பணிபுரிகிறார். இரண்டாவது மகள் மேகா.

family

இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் காணவில்லை என உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளனர். அந்த புகாரில் மூத்த மகள் பல்லவிக்கும், இரண்டாவது மகள் மேகாவுக்கும் இடையே சிறிய சண்டை ஏற்பட்டது. அதனால் பல்லவி கோபித்து கொண்டு காரை எடுத்து வெளியே சென்றுவிட்டாள் என்று கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி கட்சிகளை வைத்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்என்று கூறப்பட்டது.இதனையடுத்து பல்லவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தவறான செய்திகள் பகிரப்படுகின்றன. நான் நன்றாகவே இருக்கிறேன். போலியான தகவல்களை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

complaint daughter Investigation police singer
இதையும் படியுங்கள்
Subscribe