Skip to main content

கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள பெண் துணைத் தலைவராக தேர்வு!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

 Famous rowdy's wife elected as vice president in jail in cannabis case!

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது.

 

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (21.10.2021) பதவியேற்க வந்த பிரபல ரவுடியின் மனைவியைப் பதவியேற்பு விழா கூட்டத்தில் வைத்தே கஞ்சாக் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்த நிலையில், இன்று அவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர் விஜயலக்ஷ்மி. இவர் செங்கல்பட்டில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார்.

 

 Famous rowdy's wife elected as vice president in jail in cannabis case!

 

உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக் கூடாது, என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சிறையிலிருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலக்ஷ்மி, தேர்தலில் நின்று வெற்றிபெற்று பதவியேற்க வந்த நிலையில், அவரை பதவியேற்பு விழா மேடையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தி விற்றுவந்தது தெரியவந்ததால் அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தது.

 

விஜயலக்ஷ்மி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. விஜயலக்ஷ்மியின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் தற்போது அவர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.