A famous rowdy was to in Thiruvanmiyur

சென்னை திருவான்மியூரில் ரவுடி ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்து சரவணனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏற்கனவே இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ரவுடி பாலா என்ற நபரை மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் போலீசார் அக்கும்பலை கைது செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது திருவான்மியூரில் ரவுடிஒருவர்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.