Advertisment

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

 famous rowdy was hacked to passed away in Dindigul

திண்டுக்கல்லில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறையில் இருப்பதால் இவருக்கு அடைமொழியாகப் பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் சவுக்கு தோப்பில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பட்டறை சரவணனை மடக்கி கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண் டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவா ளி களை தேடி வருகின்றனர். இச்சம் பவம் திண்டுக்கல்லில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police rowdy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe