​    ​jagan

பிரபல ரவுடி ஜெகன் என்பவ வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Advertisment

புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். 35 வயதான இவர் மீது புதுவை மாநிலத்தில் கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வில்லியனூர் போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு, பரிசினையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்தநிலையில் கண்டமங்கலத்தை அடுத்த சின்ன அமணங்குப்பம் கிராமத்தில் ஜெகன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

இதை பார்த்த கிராம மக்கள் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கோபி, மோகனமுத்து, செந்தில்குமார் மற்றும் போலீசார் அமணங்குப்பம் கிராமத்துக்கு விரைந்து வந்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அங்கு பிணமாக கிடந்த ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகிறது.