binu

பிரபல ரவுடி பினுவை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Advertisment

அண்மையில் சென்னை மாங்காட்டை அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரவுடி பினுஅரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

பிறகு மங்காடுகாவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியே வந்த பினு. கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவனை மீண்டும் தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவள்ளூரில் பாதிரிவேடு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளை பாதிரிவேடு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனுடன் பினுவின் கூட்டாளி பிரகாஷும் கைது செய்யப்பட்டுள்ளான்.