Advertisment

பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி 'கல்வெட்டு ரவி' கைது! - ஆந்திராவில் சுற்றிவளைத்த போலீசார்!

Famous Rowdy arrested,

6 கொலை வழக்கு உட்பட 35 வழக்குகள், 6 முறை குண்டர் சட்டம் என தேடப்பட்டு வந்தமுக்கியக் குற்றவாளியான கல்வெட்டு ரவியை இன்று வண்ணாரப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சென்னையில் ஒருகாலத்தில் கலக்கிய மாலைக்கண் ரவியின் வலது கையாக இயங்கியவர் கல்வெட்டு ரவி. ரவியின் தனி ராஜ்ஜியம் எஸ்பிளனேடு நித்தியானந்தை கொலைசெய்ததில் தான் தொடங்கியது. கேளம்பாக்கத்தில் கன்னியப்பன், தண்டையார் பேட்டையில் வீனஸ், ராயபுரத்தில் பிரான்சிஸ், பொக்கை ரவி, வண்ணாரப்பேட்டை சண்முகம் இவர்கள் எல்லாம் கல்வெட்டு ரவியால் கொலை செய்யப்பட்டவர்கள்.அதன் பிறகு,போலீசாரால் முக்கிய ரவுடிகளை என்கவுண்ட்டர் லிஸ்ட்டில் நம்மையும் சேர்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பாஜக கட்சியில் இணைந்துகொண்டார்.

Advertisment

இந்த நிலையில்,சென்னை வண்ணாரப்பேட்டை, காசிமேடு, கேளம்பாக்கம் ஆகிய காவல்நிலையத்திலும் பிடிவாரண்ட் இருந்து வந்தநிலையில், ராயப்பேட்டைஅரசு மருத்துவமனையில் கொலை வழக்கு என 10க்கும் மேற்பட்ட பெண்டிங் வழக்கு இருந்தது. இந்த வழக்கை, கையில் எடுத்த ஜே.சி பாலகிருஷ்ணன் தலைமையிலான டீம், முழுவீச்சாகத் தேடிவந்த நிலையில், ஆந்திராவில் தனது மச்சான் திருமணத்திற்கு வந்த கல்வெட்டு ரவியை சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய ஜேசி பாலகிருஷ்ணன், "வட சென்னையில் உள்ள ஒட்டுமொத்த பிடிவாரண்ட் குற்றவாளிகளையும்நாங்கள் கைது செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று கல்வெட்டு ரவியை கைது செய்துள்ளோம் மற்றவர்களையும் கைது செய்வோம். ரவுடியிசம் இல்லாத வட சென்னையாக மாற்றுவோம்" என்றார்.

arrest popular rowdy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe