சென்னையில் பிரபல ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் பிரபல ரவுடி அருண்பாண்டியனை சென்னை மேற்கு அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரபல கூலிப்படை கும்பலைச் சேர்ந்த சூழ்ச்சி சுரேஷின் நெருங்கிய கூட்டாளி ரவுடி அருண்பாண்டியன் ஆவார்.
ரவுடி அருண்பாண்டியன் ஹாவாலா பணம் கொண்டு செல்வோரைக்குறி வைத்துக்கொள்ளையடித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடி அருண்பாண்டியன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.