Advertisment

வாகன சோதனையில் சிக்கிய ரவுடியால் கைதான பிரபல ரவுடிகள்!

Famous rowdies arrested by rowdy caught in vehicle check

Advertisment

சென்னை எண்ணூர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவர் ஆந்திராவிலிருந்து கடத்திவந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடைய கூட்டாளிகள் குறித்து கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் கோகுல் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் (40), அவரது கூட்டாளிகள் சசிகுமார் (24), மதிவாணன் (26) ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தனசேகரனின் கூட்டாளிகள் அம்பத், கட்டை ரவி ஆகியோரை தேடிவருகின்றனர். பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் மீது ஏற்கனவே 7 கொலைஉள்ளிட்ட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

arrested rowdies police Chennai trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe