Advertisment

சுகாதாரத்துறைக்குச் சென்ற திடுக்கிடும் புகார் - பிரபல மருத்துவமனைக்குச் சீல்!

A male in the womb? Woman?- Famous hospital in Chennai sealed

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்று கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவித்ததாக புகார் எழுந்த நிலையில் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றுள்ளனர்.

Advertisment

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது கேடன்ஸ் ஹாஸ்பிடல். இங்கு சட்ட விரோதமாக சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது மற்றும் உரிய அனுமதியின்றி மனநோய் சார்ந்த சிகிச்சைகள் செய்வது தொடர்பாக புகார்கள் வந்திருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றுஆய்வு செய்தனர். ஆய்வைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

1997 மருத்துவ சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான புகார்கள் ரகசியமாக சுகாதாரத்துறைக்கு வந்திருந்த நிலையில் அதன் அடிப்படையில் மருத்துவமனையில் நேரடியாக சென்று சோதனை செய்த பிறகு மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் மருத்துவமனையின் உரிமையாளரான களத்தூர் ரவி என்பவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Seal Chennai hospital
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe