/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/orisa-balu_0.jpg)
ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்பட்ட கடலியல் வரலாற்று ஆய்வாளரின் இயற்பெயர் சிவபாலசுப்ரமணி. இவருக்கு வயது 60. இவர் ஆமைகள் நீர் வழித்தடங்கள் மூலம்பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டது குறித்துக் கண்டறிந்தவர். குமரிகண்டம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரிசா பாலு இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். இவரின் மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்கிற சிவபாலசுப்பிரமணி மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். ஒரிசா பாலு தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல்வழியே தேடிக் கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர் ஆவார். தன்னலம் கருதாத தமிழ் நலம் காக்கும் அவரது உழைப்பும் ஆர்வமும் என்றும் மதிக்கப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)