Famous dancer issue; police investigation

பிறந்தநாளன்றே நடனக் கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் நடனக் கலைஞர் ரமேஷ். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். அந்த பகுதியில் மேடை பாடல்களுக்கு நடனமாடி வந்த இவர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் நடனமாடி பிரபலமானார். அதன் மூலம் தனியார் தொலைக்காட்சி சேனலில் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். சமீபத்தில் வெளியாகியிருந்த அஜித்தின் துணிவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் அவர் வசித்து வந்த கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் 10ஆவதுமாடியிலிருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.