Famous comedian arrested for insulting judge

Advertisment

நீதிபதியை ஆபாசமாக திட்டியதாக பிரபல காமெடி நடிகர் மற்றும் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி திருமால் பீனிக்ஸ் பூங்கா பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ஜெயமணி என்ற பிரபல திரைப்பட நடிகரும் அவருடைய நண்பர் மாரிமுத்துவும் நீதிபதியை ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் நீதிபதி புகார் அளித்தார். தொடர்ந்து திரைப்பட நடிகர் ஜெயமணி மற்றும் அவருடைய நண்பர் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். வானத்தைப்போல உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துபிரபலமானவர் ஜெயமணி என்பது குறிப்பிடத்தகுந்தது.