ஆவடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பரதநாட்டிய ஆசிரியரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அடுத்த கோயில்பதாகை, கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம் (53). இவர், கடந்த 6 ஆண்டாக வீட்டில் பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். இவர், ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி இச்சிறுமி பரதநாட்டியம் கற்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/474_0.jpg)
இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி வழக்கம்போல் நடனப்பள்ளிக்குச் சென்ற சிறுமியை பாலசுப்ரமணியம் தனியாக அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து நடனம் கற்க செல்லமாட்டேன் என்று கூறி பெற்றோரிடம் மாணவி அடம்பிடிக்க, அவரிடம் விசாரித்ததில் பாலசுப்ரமணியம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து நாட்டிய பள்ளியை சுமார் 50 பேர் முற்றுகையிட்டு நேற்றிரவு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் பாலசுப்ரமணியத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்ததையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்பு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவிசர்மாவை நேற்று மாலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)