தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

writter

— WriterVPadmavathy (@padmavathyvae) September 22, 2019

Advertisment

இந்த நிலையில், நாடகம் மற்றும் சினிமா துறையில் எழுத்தாளராக இருக்கும் பத்மாவதி சேரன் ஒரு நல்ல தந்தை என்றும் அனைவருக்கும் முன்னோடியாக இருக்கிறார் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எதுவாக இருந்தாலும் பிக் பாஸ் என்பது ஒரு விளையாட்டு தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ்ஸில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் ரகசிய அறையில் வைக்கப்பட்டு பின் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டார். பின்பு கடந்த எலிமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.