
சென்னை முகப்பேர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் ராஜா. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் ராஜா இருந்துள்ளார். விஷ்வாவுடன் சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரான டேனியல் ராஜா போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
தொடர்ந்து குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் டேனியல் ராஜாவை தேடி வந்தனர். திருமங்கலம் சரக உதவியாளர் வரதராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையால்தேடப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பதுங்கி இருந்த டேனியல் ராஜாவை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நொளம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Follow Us