Advertisment

பிரபல நடிகையின் சகோதரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர். தற்போது ஏ.எல். விஜய் இயக்கம் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பவர் இவர் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கங்கனா ரனாவத் பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதில், செக்ஸ் மிகவும் முக்கியமானது, அதை அறுவெறுக்க விஷயம்போல் கருதாமல் பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

actress

actress

Advertisment

இந்த நிலையில் கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி, தனக்கு நேர்ந்த ஆசிட் வீச்சு குறித்து பேசும் போது, நான் வெளியிட்டிருப்பது என் கல்லூரிக் கால புகைப்படம். கல்லூரியில் படிக்கும்போது, ஒருவன் என்னிடம் காதலைத் தெரிவித்தான். ஒருவரின் காதலை ஏற்றுக்கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா. என் மேல் ஆசிட் வீசியதால் கண், மார்பு, கழுத்துப் பகுதிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. என் மார்புப் பகுதியை, சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து ஒட்டினார்கள். அப்படி இருந்தும் ஆசிட் வீச்சால் என் குழந்தைக்கு கூட பாலூட்ட முடியவில்லை. குற்றம் செய்தவனுக்கு ஒரு மாதம் தண்டனை, பாதிக்கப்பட்டவளுக்கு ஆயுசு முழுக்க தண்டனை’ என பரபரப்பாக பேசியுள்ளார்.

Actress Bollywood incident kanganaranaut sister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe