Famous astrologer 'Shelvi' joins BJP

Advertisment

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்திருந்த நிலையில், நேற்று கட்சியின் இரு முக்கிய நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடையே அறிமுகப்படுத்தினார். ஒருவர் தமிழருவி மணியன். இவர், தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் மேற்பார்வையாளர்.மற்றொருவர் அர்ஜுன மூர்த்தி. இவர், தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் எனவும் கூறியிருந்தார்.

Famous astrologer 'Shelvi' joins BJP

மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும்அர்ஜுன மூர்த்தி, கடந்த 2-ஆம் தேதி வரை, பா.ஜ.கவில் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப்பொறுப்பு வகித்து வந்த நிலையில், அக்கட்சியிலிருந்து இருந்து விடுவிக்கப்பட்டு, ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Advertisment

இதனால், பா.ஜ.கவில் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்புவெற்றிடமானது. இந்நிலையில், தற்பொழுது பிரபல ஜோதிடர் ஷெல்வி பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.