Advertisment

தோசையில் தங்க மூக்குத்தி... பிரபல நடிகை அதிர்ச்சி

hk

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நடிகை சூரிய தாரா. இவர் 10க்கும் மேற்பட்ட மலையாளத் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கொச்சியை அடுத்த எரூர் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் காரில் வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்காகக் கடை ஒன்றில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் கொடுத்து சமைக்கக் கூறியுள்ளார். நடிகையின் தாயாரும் தோசையுடன், சட்னி செய்து அவரை சாப்பிட அழைத்துள்ளார்.

Advertisment

நடிகை சூரிய தாரா சாப்பிடத்துவங்கியதும் வாயில் விசித்திரமாக ஏதோ அகப்பட என்னவென்று அதைக் கையில் எடுத்து பார்த்துள்ளார். அது பெண்கள் அணியும் மூக்குத்தி என்றவுடன் அதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "மாவு பாக்கெட் போடும்போதுதவறுதலாக விழுந்து இது நடைபெற்றிருந்தாலும், குழந்தைகள் இதை சாப்பிட்டிருந்தால் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்குமே, உணவு விஷயத்தில் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணம்" என்று கூறியுள்ளார்.

Advertisment

dosa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe