biss

Advertisment

வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் 'சென்னை 28' நடிகை விஜயலட்சுமி நுழைவது போன்ற வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி, ஷாரிக், பொன்னம்பலம், நித்யா, ரம்யா, அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி ஆகிய 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீதம் உள்ள 9 பேரால் பிக்பாஸ் வீடு தினமும் அடி தடி, உதை என போர்களமாக உள்ளது. சின்ன விஷயத்திற்கும் காரணமே இல்லாமல் மாத்தி மாத்தி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது காண்பவர்களை மிகவும் சலிப்படைய செய்துள்ளது.

Advertisment

biss

இதனிடையே இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் மஹத், பாலாஜி, மும்தாஜ், சென்ராயன் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இதிலிருந்து ஒருவர் வெளியேறும் பட்சத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆகக் குறையும்.

இப்படியே நிகழ்ச்சி சென்றால் பார்வையாளர்களுக்கு மிகுந்த போரடிக்கும் என்பதால் வைல்ட் கார்ட் என்ட்ரியை வைத்து புதிதாக நடிகை விஜயலட்சுமியை பிக்பாஸ் போட்டியாளராக இணைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் விஜயலட்சுமி. இதையடுத்து, 'அஞ்சாதே', 'சரோஜா', பிரியாணி' போன்ற படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். சமீபத்தில் நாயகி எனும் சீரியலில் நடித்து வந்த அவர் அதிலிருந்து விலகினார்.

Advertisment

vij

விஜயலட்சுமி பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருப்பதை நிகழ்ச்சி குழுவினர் புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் விஜயலட்சுமியை வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள பலத்த கலவரங்களுக்கு மத்தியில் என்ட்ரி கொடுத்துள்ள விஜயலட்சுமியால் இனி கலகலப்பு உண்டாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்..