தனியார் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகையின் மூக்கின் மீது எதிர்பாராத விதமாக ரசிகரின் கை பட்டதில் மூக்கு உடைந்து ரத்தம் வந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நூரின் ஷெரீப். இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க நூரின் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர்.

Advertisment

actress

actress

Advertisment

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாக பட்டுள்ளது. இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அப்போது வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார். அதன் பின்பு வலியை பொறுத்துக் கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்றார். பிறகு நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்தது குறித்து நடிகை நூரின் ஷெரீப் விளக்கமளித்துள்ளார். அதில் தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக கூறியுள்ளார். ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாயார் கூறியுள்ளார்.