பிரபல நடிகர் மரணம்! திரைத்துறையினர் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அடிப்படையில் விவசாயியான இவர், திரைத்துறை மீது உள்ள ஈர்ப்பால் இயக்குநர் சசிகுமார் இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர்தான் நாடோடிகள் கோபால். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடித்தில் நடித்து வந்தார். இவரது கேரக்டர் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. தொடர்ந்து முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளிவந்த நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.

Nadodigal Gopal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். சென்ற மாதம் வரை ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடித்து விட்டு ஈரோடு வந்த அவருக்கு உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார்.

நாடோடிகள் கோபாலுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மறைவு திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இயக்குநர் சமுத்திரக்கனி, சசிக்குமார் போன்ற பலருக்கும் நெருக்கமானவர்.

actor shock tamil cinema
இதையும் படியுங்கள்
Subscribe