Advertisment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாமே நடிப்பு தான்...பிரபல நடிகர் அதிரடி!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். சமீபத்தில் இயக்குனர் சேரனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மரியாதை இல்லாமல் நடத்தியது இயக்குனர் மற்றும் நடிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Advertisment

big boss

இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பது எல்லாமே உண்மை கிடையாது. அங்கு நடப்பது எல்லாமே நடிப்பு தான் என்று கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியால் நம்மளுடைய நேரம் தான் வீணாகும் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இயக்குனர் சேரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவருடைய மதிப்பிற்கு கலங்கம் ஏற்படும் வகையில் அமைந்துவிட்டது. என்கிட்டயும் வந்து கேட்டாங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி நான் முடியாது என்று சொல்லிவிட்டான் என்றும் கூறியுள்ளார்.

actor bigboss kamalhaasan tv show
இதையும் படியுங்கள்
Subscribe