Famous actor involved in car accident near Dharmapuri

போதைப்பொருள் வழக்கு, நடிகைக்கு இடையூறு தந்தது உள்ளிட்ட விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மருத்துவச் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து தன்னுடைய குடும்பத்தாருடன் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

road accident

இன்று காலை கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்று கொண்டிருந்த நிலையில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது இவர்கள் பயணித்த கார் மோதி விபத்தில் சிக்கியது. இதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ சிக்கி காயம் அடைந்த நிலையில் அவருடைய தந்தை சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் மரியா, ஷைன்டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் காயங்களுடன் மீட்கப்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment